பரங்கிமலையில் 8 கோடி மதிப்புள்ள | 25- கிலோ தங்க நகைகளை பறிமுதல் |
ஆலந்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணி தலைமையில் பரங்கிமலை கத்திப்பாரா மேம்பாலம் அருகே திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர் அப்போது அங்குவந்த தனியார் பார்சல் சர்வீஸ் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் கொத்து கொத்தாக தங்க நகைகள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இவற்றை கொண்டு வந்த செந்தில் அதிபன் என்பவரிடம் விசாரித்த போது பெங்களூரில் தயாரிக்கப்பட்ட தங்கநகைகளை விமானம் மூலம் சென்னைக்கு வந்து சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்வதா தெரிவித்தார் ஆனால் இந்த தங்க நகைகள் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத்தால் ரூ.8 கோடி மதிப்புள்ள
25 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரங்கிமலை காவல் ஆய்வாளர் வளர்மதி உதவியுடன் ஆலந்தூர் தொகுதியின் உதவி தேர்தல் அதிகாரி பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்…
நமது நிருபர்