தொழில் அதிபர் வீட்டில் 11 லட்சம் பறிமுதல் | வருமான வரித்துறை அதிரடி |

சென்னையில் வருமானவரித்துறையினர் தொடரும் சோதனை…
முக்கிய தொழில் அதிபர் வீட்டில் 11 லட்சம் பணம் பறிமுதல். அடையாறு லோகநாதன் செட்டித்தோட்டத்தில் தொழிலதிபர்
தர்மராஜன் வீடு, கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் லஞ்சமாக கொடுக்க, இவரது வீட்டில் பணம் கட்டு கட்டாக பதுக்கி வைத்திருப்பதாக, தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் வந்தது. தேர்தல் ஆணைய தகவலின் பேரில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி 11 லட்ச ரூபாயை தற்போது கைப்பற்றியுள்ளனர்.
இந்த பணத்துக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் , தொழிலதிபர் தர்மராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்…
நமது நிருபர்