நடத்தையில் சந்தேகம் | மனைவியை கொலை செய்த காவலர் |
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவன் கைது.!
சென்னை, பெரம்பூர் செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்நாத் வயது 37 இவர் கொத்தவால்சாவடி போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா வயது 33. இவர்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றன இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கணவன் மனைவி இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் 4 மணி அளவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அது கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்நாத் இரும்பு ராடால் மனைவியின் தலையில் அடிக்கவே மனைவி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். உடனே கணவர் பிரேம்நாத் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே மனைவி அர்ச்சனா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த செம்பியம் போலீசார் பிரேம்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அர்ச்சனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது…
நமது நிருபர்