தவறான உறவுக்கு அழைத்து வாலிபரை | அடித்து கொலை செய்த இருவர் |
தவறான உறவுக்கு அழைத்து வாலிபரை | அடித்து கொலை செய்த இருவர் |
பெருந்துறை அருகே விஜயமங்கலம் கள்ளியம்புதூர் கே.பி.ஆர் தோட்டம் அருகில் உள்ள காட்டுக்குள் நேற்று முன்தினம் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ஒருவர் கிடப்பதை கண்ட அப்பகுதியினர்… அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு குறித்து வழக்குப் பதிவு செய்த பெருந்துறை காவல் ஆய்வாளர் திரு. சுகவனம் காயங்களுடன் கிடந்தவர் யார்.? அவரை தாக்கியது யார்.? என்பது குறித்து விசாரித்து வந்தார்.இந்நிலையில் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால்… மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார். இதனால் இவ்வழக்கை கொலை வழக்காக மாறியது. மேலும் போலீசாரின் விசாரணையில் காயங்களுடன் கிடந்தவர் திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன் பாளையம் அருகே உள்ள கூனம்பட்டியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் கோவிந்தராஜ்(34) என்று தெரியவந்ததது. மேலும் கோவிந்தாஜுக்கு குடிப்பழக்கம் உள்ளதும், இதனால் அவரது மனைவி அவரிடம் கோபித்துகொண்டு பிரிந்து சென்றுவிட்டதும் தெரியவந்துள்ளது. மனைவியை பிரிந்த கோவிந்தராஜுக்கு புதிய நண்பர்கள் பழக்கமாகியதும், இதனால் அவர் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதும் தொடர்ந்து வந்துள்ளது. மேலும் சம்பவ தினத்தன்று உள்ளூர் மாரியம்மன் பண்டிகை நடைபெற்றுள்ளது அப்போது ஓரின சேர்க்கை நண்பர்கள் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் தியாகராஜன், லோகநாதன் என்பரின் மகன் நவீன்குமார், மற்றும் கவின் (எ) சங்கரநாராயணன் ஆகியோர் சேர்ந்து பக்கத்து ஊரான கள்ளியம்புதூருக்கு மது குடிக்க வந்துள்ளனர். மது குடித்துவிட்டு திரும்பி செல்லும் வழியில் சம்பவ இடமான காட்டுப்பகுதியில் நான்கு பேரும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் மன்ற மூவரும் சேர்ந்து கோவிந்தராஜை அருகில்கிடந்த குச்சி மற்றும் கட்டையால் தாக்கியதால் பலத்த காயமுற்ற கோவிந்தராஜ் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இறந்ததுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசார் தங்களை நெருங்கி விட்டதை அறிந்த நவீன்குமார், தியாகராஜன் ஆகியோர் இன்று காலை விஜயபுரி முன்னாள் பிரசிடெண்ட் சீனிவாசன் அவர்களிடம் நடந்ததை கூறி சரணடைந்தனர்.மேற்படி சீனிவாசன் குற்றவாளிகளை பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனத்திடம் ஒப்படைத்தார் உடனே அவர்களை கைது செய்து கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்த்ரேட் திரு.குமரகுருபரன் முன்பு ஆஜர் படுத்தினர் பின் குமரகுருபரன் அவர்களின் உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் வைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான கவின் (எ) சங்கரநாராயணனை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
நிருபர் சண்முகசுந்தரம்