Fri. Dec 20th, 2024

அடையாரில் காதலித்த பெண்ணை 15 இடங்களில் | கத்தியால் குத்திய காதலன் கைது |

அடையாரில் காதலித்த பெண்ணை 15 இடங்களில் | கத்தியால் குத்திய காதலன் கைது |

இளம் பெண்ணை 15 இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய காதலனை மடக்கி பிடித்த பொதுமக்கள் சென்னை அடையார் மாளவியா அவன்யூ 2வது தெருவில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி தனியார் குடியிருப்பில் தன் நண்பர்களுடன் வெளியூரில் இருந்து வந்து தாங்கி பணிபுரிந்து வருகிறார் காவியா என்ற பெண்.

இன்று மாலை தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்த போது காவியாவை மர்ம நபர் ஒருவர் அவரது உடம்பில் கத்தியால்
15 இடங்களில் குத்தியுள்ளார் மேலும் அவரை தடுக்க வந்த பொதுமக்களையும் கற்கள் கொண்டு தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளார் அவரை பின்தொடர்ந்த ஜார்ஜ் என்ற நபர் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இது குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காவியாவுக்கும் அந்த மர்ம நபருக்கும் ஏதாவது முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் கத்தியால் குத்தியது காவியாவின் காதலன் என்பதும் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பேட்டி :- ஜார்ஜ். குற்றவாளியை மடக்கி பிடித்தவர்…

நமது நிருபர்