Fri. Dec 20th, 2024

உதவி ஆய்வாளரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற | வழிப்பறி கொள்ளையர்கள் கைது |

உதவி ஆய்வாளரை பீர் பாட்டிலால் தாக்க முயன்ற | வழிப்பறியில் ஈடுபடும் இருவர் கைது |

வாகன சோதனையில் சிக்கிய வழிப்பறி கொள்ளையனை துரத்திய உதவி ஆய்வாளரை பீர்பாட்டிலால் தாக்க முயன்ற இருவர் கைது சென்னை, அண்ணாநகர் மற்றும் சுற்று வட்டாரபகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அரும்பாக்கம் பகுதியில் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரேனுகாதேவி தலைமையில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட பொழுது… அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அப்பொழுது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பச்சைமுத்து அவரை விரட்டி சென்று பிடிக்க முயன்றபோது மறைத்து வைத்து இருந்த பீர்பாட்டிலால் அவரை தாக்க முயற்சி செய்தனர். விடாமல் துரத்திய உதவி ஆய்வாளர் அவர்களை பிடித்து கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவா (எ) சிவக்குமார் (27), அவரது சகோதரர் லிங்கம் (எ) கணேசன் (32) மற்றும் இவர்களுடைய கூட்டாளிகள் ராஜ்குமார், முருகன், விஜி ஆகியோர் சேர்ந்து அண்ணாநகர் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டதும், மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனம், அண்ணாநகர் டவர் பூங்கா அருகே வாலிபரை தாக்கி செல்போனை பறித்து சென்றதும், அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சஜன பிரியாவை தாக்கி 5- சவரன் நகையை பறித்து சென்றது மட்டுமில்லாமல் டிபி சத்திரத்தில் உள்ள மதுபான கடையில் ஒருவரை சராமாரியாக வெட்டி விட்டு சென்றதும் தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் முருகன், விஜி, ராஜ்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாகவும், கணேசன் மீது அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், சைதாப்பேட்டை போன்ற காவல் நிலையங்களில் வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சிவாவிடம் இருந்து 4 சவரன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்…

நமது நிருபர்