டாஸ்மாக் கேஷியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி…!!
சென்னை, அண்ணாநகரில் டாஸ்மாக் கடையின் மேலாளரிடம், கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.
சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள மதுபான கடையில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் கணக்காளர் சத்தியமூர்த்தியை தாக்கி, கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து ஒயின் ஷாப் கேஷியர் சத்தியமூர்த்தி என்பவர், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். வாழ்க்கை பதிவு செய்த அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்