இருசக்கர வாகன சீட்டை உடைத்து | செல்போன் திருட்டு |
சென்னை ஐ.சி.எப் பகுதியில் இருசக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து செல்போன் திருட்டு.
சென்னை, வில்லிவாக்கம் தெற்கு திருமலை நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (16). செயின் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை அயனாவரம் ரெயில்வே குடியிருப்பில் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். அப்பொழுது தனது ஹோன்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கடியில் செல்போனை வைத்து பூட்டிவிட்டு விளையாட சென்றுள்ளார். விளையாடிவிட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது சீட்டு உடைக்கப்பட்டு… சீட்டுக்கு அடியில் இருந்த செல்போனை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து நவீன்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஐ.சி.எப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்