நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு…!!!
சென்னை கோயம்பேடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு.
சென்னை, வில்லிவாக்கம் தாதன்குப்பத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (19). பூந்தமல்லி – நெற்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணி புரிந்து வருகிறார். இன்று அதிகாலை 5:30 மணி அளவில் வில்லிவாக்கத்தில் இருந்து பேருந்து மூலம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தின் அருகே இறங்கி, போனில் பேசி கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது இரு சக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், கையில் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து ராஜலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்