Fri. Dec 20th, 2024

கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு | வீசிய மர்ம நபர்கள் |

கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு | வீசிய மர்ம நபர்கள் |

அண்ணாநகர் வடக்கு திமுக பகுதி செயலாளர் பரமசிவம் வீட்டில் இன்று காலை 6.30 மணி அளவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாக்கெட்டுகளை மர்ம நபர்கள் இன்று காலை வீசியுள்ளனர் டிபி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள பரமசிவத்தின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது ஃபார்ச்சுனர் கார் சேதம் அடைந்துள்ளது.மத்திய சென்னைக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதிகளில் நேற்று இரவு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அமமுக மற்றும் SDPI கட்சியினர் முயன்றதாகவும் இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டது.

இதில் எஸ்டிபிஜ கட்சியை சேர்ந்த ஜெரினா மற்றும் தேவியும் திமுகவை சேர்ந்த சசி என்பவரும் காயமுற்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியினரும், திமுகவினரும் அமைந்தகரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று காலை 6.30 மணியளவில் பரமசிவம் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. பெட்ரோல் பாக்கெட்டுகளை வீசியவர்களை கண்டறிய டிபி.சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் தகவல் அறிந்து உடனே பகுதி செயலாளர் பரமசிவம் வீட்டிக்கு வந்தனர்.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடத்தையும் காரையும் பார்வையிட்டனர் பரமசிவனுடன் பேசினர் தொடர்ந்து தொண்டர்கள் அவரது வீட்டிற்கு வெளியே வண்ணம் உள்ள நிலையில் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது மூன்று இரு சக்கரவாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைகுட்டையால் முகத்தை மூடியப்படி செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்