Fri. Dec 20th, 2024

அமைச்சர் கருப்பண்ணனை நம்பி | நடுத்தெருவுக்கு வந்த குடும்பம் |

அமைச்சர் கருப்பண்ணனை நம்பி | நடுத்தெருவுக்கு வந்த குடும்பம் |

பொய் வழக்கில் கைது செய்ய காவல்துறை முயற்சி?

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீ குளிக்க முயற்சித்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள மயிலம்பாடியை சேர்ந்தவர் சிவராஜ் இவரது சகோதரர் அர்ஜூனன் அவரது சகோதரி சம்பூர்ணம், இவர்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது இந்த நிலத்திற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் நாலரை ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

தற்போது புறம்போக்கு நிலத்தில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்பணி தொடங்கியுள்ளது. இதற்கான நிலத்தை கையகபடுத்தும் போது சிவராஜின் நிலத்தில் கிணறு அமைத்து தருவதாகவும் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் தங்களுக்கு ஒதுக்குவதாகவும் தமிழக அமைச்சர் கருப்பண்ணன் உறுதியளித்துள்ளார்.

ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் அமைச்சர் காலம் தாழ்த்தியதால் அதிருப்தி அடைந்த சிவராஜ் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர் இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் 7 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் துண்டுதலின் பேரில் இவர்களை பொய் வழக்கில் கைது செய்யலாம் என தகவல்…

பேட்டி அளித்த : சுகன்யா – தீக்குளிக்க முயன்றவர்…

ச.விமலேஷ்வரன்