100 கிலோ தங்க நகைகளை ஆவணங்கள் சரிபார்த்து | அனுப்பி வைத்த தேர்தல் அதிகாரிகள் |
100 கிலோ தங்க நகைகளை ஆவணங்கள் சரிபார்த்து | அனுப்பி வைத்த தேர்தல் அதிகாரிகள் |
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில் அண்ணா நகர் சாந்தி காலணி 13வது மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி இனியன், உதவி ஆய்வாளர் லட்சுமனன், தீபன் குழு சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியே வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது அதில் துப்பாக்கி ஏந்திய 3 பாதுகாவலர்கள் இருந்தனர் அவர்களிடம் விசாரணை செய்தபோது தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்தனர் இதையடுத்து அதிகாரிகள் சோதனை செய்தபோது 100 கிலோ தங்க நகைகள் இருப்பதும் சென்னை விமான நிலையம் எடுத்து செல்லப்பட்டு கொல்கத்தா, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நகை கடைகளின் கிளைகளுக்கு எடுத்து செல்வது தெரியவந்தது இதையடுத்து சுமார் 2 மணி நேரம் ஆவணங்களை சரிபார்த்த போது நகைகளுக்கு உண்டான ஆவணங்கள் முறையாக இருந்ததால் அனுப்பி வைக்கப்பட்டது…
நமது நிருபர்