ஆக்சா பிளேடு மூலம் துண்டு துண்டாக வெட்டி | கொலை செய்தவர்கள் கைது |
ஆக்சா பிளேடு மூலம் துண்டு துண்டாக வெட்டி | கொலை செய்தவர்கள் கைது |
பீகார் மாநிலத்தை சேர்ந்த நவீன்குமார் பட்டேல் – கர்நாடகாவை சேர்ந்த சசிகலா தம்பதியினர் ஈரோடு முத்துமாணிக்கம் நகர் பகுதியில் கடந்த ஏழு மாதமாக வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர் இவர்கள் அடிக்கடி சொந்த ஊரான பீகார் செல்லும் போது ரயிலில் நித்தீஸ்குமார் என்ற இளைஞர் பழக்கமாகி இவர்கள் வீட்டில் தங்கி தினக்கூலி வேலை செய்து வந்துள்ளார் இந்த நிலையில் நவீன்குமார் பட்டேல் – சசிகலா ஆகியோர் தீடீரென நித்தீஸ்குமார் பெற்றோர்க்கு போன் செய்து ரூபாய் 3 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது நித்தீஸ்குமாரின் பெற்றோர் இது குறித்து பீகார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் துறையினர் ஈரோட்டிற்கு தேடி வந்தனர் இதனிடையே நவீன்குமார் பட்டேல் – சசிகலா – ஆகிய இருவரும் நித்தீஸ்குமாரை இரும்புகளை துண்டாக்க பயன்படும் ஆக்சா பிளேடு மூலம் தலை,கை,கால்,மற்றும் இடுப்பு பகுதி என தனிதனியாக வெட்டி சாக்கு பையில் போட்டு மூட்டை கட்டி வைத்துவிட்டனர் .
பீகார் மாநில காவல்துறை உதவியுடன் வந்து அப்பகுதியில் விசாரணை நடத்தி நவீன்குமார் – சசிகலா வீட்டில் சோதனை செய்தபோது நித்தீஷ்குமாரை கொலை செய்து மூட்டைகட்டி வைத்து இருப்பது தெரிய வர உடனடியாக நவீன்குமார் பட்டேல் , சசிகலா மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல்தத்தா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து நித்தீஸ்குமாரின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நித்தீஸ்குமார் கொலை சம்பவம் குறித்து மேலும் தொடர்பு உள்ளவர்களை பற்றி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…
நிருபர் சண்முகசுந்தரம்