Fri. Dec 20th, 2024

இரண்டு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் | பஞ்சாயத்து அலுவலகமும் முற்றுகை |

இரண்டு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் | பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை |

திருத்தணியில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சாலை மறியலை தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்தை மக்கள் அடிப்படை வசதி கேட்டு முற்றுகையிட்டனர் பெண்கள்..

ஒரே நேரத்தில் மூன்று சம்பவங்களால் திருத்தணியில் போக்குவரத்து பாதிப்பு திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் பஞ்சாயத்து பகுதியில் 6 மாதமாக குடி தண்ணீர் வரவில்லை என்று அந்த பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தின் முன்பே காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் குடி தண்ணீர் கேட்டு கோஷங்களுடன் போராட்டம் செய்து அதிகாரிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து குடிதண்ணீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்டனர் இதனால் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நெரிசல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..

இதைப்போல் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் பஞ்சாயத்து சேர்ந்த பெண்களும் ஆண்களும் குடி தண்ணீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை இட்டு அதிகாரிகளிடம் குடிதண்ணீர் வேண்டும் அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி நகராட்சி பஸ் நிலையம் அருகில் உள்ள மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் குடிநீர் வேண்டும் என்று அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் நகராட்சி அதிகாரிகள் சமரசத்தை ஏற்க மறுத்து அதிகாரிகளுடன் சண்டையிட்டனர் சாலை மறியல் செய்யும் பொழுது காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்ற பொழுது காவல்துறை அதிகாரிகள் சமரசத்தையும் ஏற்க மறுத்து தொடர்ந்து போராடினார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது…

நமது நிருபர்