ஒரே பதிவு எண்ணில் பல சொகுசு கார்கள் | மோசடி ட்ராவல்ஸ் அதிபர் கைது |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓட்டுனராக பணிசெய்து வந்த சம்பத் என்பவர், தனது கடின உழைப்பால் பத்துமலை ட்ராவல்ஸ் என்ற பெயரில் சென்னை, அபிராமபுரம் காமராசர் சாலையில் ஒருசில கார்களை வைத்து ட்ராவல்ஸ் நடத்தி வந்தார்.
அவரது மகன் மோகன்பாபு என்பவருக்கு ட்ராவல்ஸ் நிறுவனம் தனியாக நடத்த வேண்டுமென்ற ஆசையினால், அவரது தந்தை சம்பத்தின் இரண்டு கார்களை வைத்து மோகன் ட்ராவல்ஸ் என்ற புதிய நிறுவனத்தை, தனது தந்தையின் அலுவலகத்திலேயே நடத்தி வந்தார்…
அபிராமபுரம், மந்தைவெளி, மைலாப்பூர் பகுதிகளில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ராவல்ஸ் நிறுவனங்கள் நான்கு அல்லது ஐந்து கார்களை வைத்து பல வருடங்களாக நடத்தி வந்த சூழ்நிலையில், மோகன் ட்ராவல்ஸ் உரிமையாளர் திரு.மோகன்பாபு என்பவர் மட்டும் ஒரு சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வாங்கியது எப்படி.?
குறிப்பாக மோகன் டிராவல்ஸ்காக வாங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த அனைத்து சொகுசு வாகனங்களுக்கும் பாண்டிச்சேரியில் ஏன் வாகனப் பதிவு செய்யவேண்டும்..?
இது சம்மந்தமாக அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட பெரிய _ ட்ராவல்ஸ் நிறுவன அதிபர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அபிராமபுரம் போலிசார் டிமாண்டி காலனிக்கு சென்று விசாரணை செய்ததில், மோகன் ட்ராவல்ஸ்க்கு சொந்தமான கார்கள் ஒரே பர்மிட் நம்பரை வைத்து, வாகனங்களை இயக்கியதும், அதன் மூலம் சாலை வரியை கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி பணம் சம்பாதித்ததும் கண்டறியப்படது. சில வருடங்களாக இவரது நிறுவனத்தில் பணி புரிந்த ஒருவர் தற்போது இவர்களுக்கு எதிராக உள்ள ட்ராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் அவர் தான் இவர் செய்த மோசடிகளை பற்றி போலீசாரிடம் புகார் அளித்து இருக்கலாம் என தகவல்…
மேலும் மோகன் ட்ராவல்ஸ் உரிமையாளர் மோகன்பாபு, போலி ஆவணம் தயார் செய்து வரி ஏய்ப்பு செய்ததற்கும், சாலை வரி ஏய்ப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தவிர அவரிடம் இருந்து ஏழு சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மோசடியில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டு இருப்பதாகவே விசாரணையில் தெரியவந்துள்ளது..!?!?
நமது நிருபர்