Sat. Dec 21st, 2024

அனுமதி பெறாத அதிமுக ஆலோசனை கூட்டத்தில் | பயங்கர மோதல்

|

சென்னை வில்லிவாக்கத்தில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கட்சியினர் இடையே பயங்கர மோதல்.

தினேஷ் என்பவர் படுகாயம். அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் ரத்து சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு தலைமையில் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் வெங்கடேஷ் பாபுவின் கார் ஓட்டுனர் சகாயம் என்பவருக்கும் கட்சி நிர்வாகி தினேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது இதனால் இரண்டு தரப்பினர் மோதிக்கொண்டதில் அதிமுக கட்சி பிரமுகரான தினேஷ் என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து எங்களிடம் அனுமதி வாங்காமல் ஆலோசனை கூட்டம் எப்படி நடத்தியதால் வில்லிவாக்கம் போலீசார் இந்த ஆலோசனை கூட்டததை ரத்து செய்ததால் அங்கு அதிமுக தொண்டர் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

நமது நிருபர்