கொலை செய்யப்பட்ட துணை நடிகையின் உடல் பாகங்கள் | பெற்றோரிடம் ஒப்படைப்பு |
சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை பள்ளிக்கரனை குப்பை கிடங்கில் ஜனவரி மாதம் 21 ஆம்
தேதி கை, கால்கள், வெட்டப்பட்ட நிலையில் போலீசாரால் கண்டு எடுக்கப்பட்டது. இந்த கொலை சம்மந்தமாக பள்ளிக்கரனை போலீசார் ஜாபர்ஹான்பேட்டை சேர்ந்த சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய மனைவி தூத்துக்குடியை சேர்ந்த சந்தியாவை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது தலை மற்றும் உடல் பாகம் இதுவரை கிடைக்கவில்லை இதனையடுத்து இன்று சந்தியாவின் பெற்றோரிடம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சந்தியாவின் உடல் பாகங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் உடலை பெற மருத்துவமனைக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய சந்தியாவின் தாயார் பிரசன்னகுமாரி… தனது மகளை கொடூரமாக கொலை செய்த பாலகிருஷ்ணனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், தன்னுடைய இரண்டு பேரப் பிள்ளைகளையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்…
நமது நிருபர்