ரயில் நிலையத்தில் பயணிக்கு பிரசவம்.
ரயில் நிலையத்தில் காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
எழும்பூர், ரயில் நிலையத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜீனா (25) என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் நேற்று இரவு ரயிலுக்காக, ஐந்தாவது நடைமேடையில் காத்திருந்தார். அப்போது, அவருக்கு திடீரென, பிரசவ வலி ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த, தனியார் அவசர சிகிச்சை மருத்துவர்கள், ஜீனாவுக்கு நடைமேடையிலே, பிரசவம் பார்த்தனர். அதில், சுகப்பிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தாய் மற்றும் சேய் இருவரையும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். .