உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் பணம் வாபஸ் | தேர்தல் பறக்கும் படை தீவிரம் |
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோயம்பேடு, சின்மயா நகர் காளியம்மன் கோயில் தெரு அருகே கோயம்பேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது வில்லிவாக்கத்தை சேர்ந்த கோபிநாத் (23) என்பதும் கோயம்பேடு மார்கெட்டில் கடை வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் அவர் உரிய ஆவணங்களின்றி
ரூ.72 ஆயிரம் கொண்டு வந்தது தெரியவும் அதனை பறிமுதல் செய்த கோயம்பேடு போலீசார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்…
நமது நிருபர்