ஆட்டோ ஓட்டுனரிடம் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய | வீட்டுவசதி வாரிய துறை அதிகாரிகள் கைது |
ஆட்டோ ஓட்டுனரிடம் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய | வீட்டுவசதி வாரிய துறை அதிகாரிகள் கைது |
லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி துறை அதிகாரிகள் மற்றும் தரகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாளர் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.
சென்னை திருமங்கலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ஜெ.ஜெ.நகர் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது சென்னை பெரு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வீடு கட்டித்தருவது இவ்வரியத்தின் முக்கிய பணியாகும் இந்நிலையில் ஐசிஎப். பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமாரசாமி என்பவருக்கு ஆவடியில் 338 சதுர அடி நிலத்தை வீடுவசதி வாரியம் ஓதுக்கியுள்ளது.
இந்த நிலத்திற்கான கிரயபத்திரம் பெறுவதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஜெ.ஜெ.நகர் கோட்ட விற்பனை மற்றும் சேவை மேலாளர் சக்திவேல் என்பவரை அணுகி உள்ளார்.
சக்திவேல் இளநிலை உதவியாளர் ராமசாமி மற்றும் இடைத்தரகர் ராஜா ஆகியோருடன் இணைந்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர் பிறகு 40000 ஆயிரம் தருவதாக குமாரசாமி ஓத்துக்கொண்டு கிரய பத்திரம் வாங்குவதற்கு முதற்கட்டமாக 10,ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார் மீதி பணத்தை தர சொல்லி தரகர் ராஜா தொல்லை கொடுத்து உள்ளார் இதனால் மனம் உடைந்த குமாரசாமி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுரதலின் பேரில் குமாரசாமியிடம் ரசாயனம் கலந்த மீத பணத்தை இன்று காலை 11.30 மணி அளவில் மேலாளர் சக்திவேலுவிடம் கொடுக்கும் போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் டிஎஸ்பி.ஜான் கிளமெண்ட், ஆய்வாளர் பேசில் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர், மேலாளர் சக்திவேல்/54 விற்பனையாளர் ராமசாமி, தரகர் ராஜா /49 ஆகிய மூவரையும் கையும் களவுமாக கைது செய்தனர் இதனை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் சுமார் ஆறு மணி நேரமாக சோதனை நடைபெற்றது இச்சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்…
நமது சிறப்பு நிருபர்