Fri. Dec 20th, 2024

4 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி | ஆவணங்கள் உள்ளதா பறக்கும் படை விசாரணை |

நகை கடையின் 4 கிலோ தங்கம் 4 கிலோ வெள்ளி | பறிமுதல் செய்த பறக்கும் படை |

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திருமங்கலம் காவல் உதவி மையம் அருகே தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் சங்கீதா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர் அப்போது அந்த வழியே வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது தனியார் நகை கடை ஊழியர்கள் 3 பேர் இருந்தனர்.திருமங்கலத்தில் உள்ள நகைகடையின் கிளையில் இருந்து தி.நகர் கிளைக்கு நகைகளை எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.

அதற்கு உண்டான ஆவணங்கள் கேட்டபோது உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிந்ததும். மண்டல அலுவலகத்திற்கு எடுத்து சென்று சோதனை நடத்தியபோது வண்டியில் வந்தது 4-கிலோ தங்கம், 4-கிலோ வெள்ளி, இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருவதாகவும் உரிய ஆவணங்கள் கொடுத்த பிறகு மட்டுமே ஓப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்…

பேராண்மை சிறப்பு நிருபர்