Fri. Dec 20th, 2024

தயாநிதிமாறன் மீது வழக்கு பதிவு செய்த சாம்பால் |

தயாநிதிமாறன் மீது வழக்கு பதிவு செய்த சாம்பால் |

மத்திய சென்னை வேட்பாளரான சாம்பால் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் தயாநிதிமாறன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் ( Central Crime Branch ) மது ஒழிப்பை தான் சார்ந்துள்ள பட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையாக இருக்கும் பட்சத்தில் நான் மத்திய சென்னை வேட்பாளராக மக்களை களத்தில் சந்தித்து ஆதரவு கேட்டு வருவதாகவும், மது ஒழிப்பிற்கு ஆதரவாக உள்ள என்னை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் என் மீது அவதூறு பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தயாநிதிமாறன் அவர்களின் குடும்ப தொலைக்காட்சி சன்.டிவியில் சாம்பால் அவர்கள் மது பாட்டிலை கையில் பிடித்தபடி காட்சி படுத்தப்பட்டது. ( பாட்டாளி மக்கள் கட்சியின் மதுவிலக்கு நாடகம் அம்பலம் அதிமுக கூட்டணியில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் உயர்ரக மதுவை கையில் ஏந்திய புகைப்படம் வெளியாகியுள்ளது ) என்ற தலைப்பில் சன். தொலைக்காட்சியில் வெளியிட்டு…

அவர் மீது அவதூறு பரப்பி வருவதால் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சாம்பால் புகார் அளித்து அதன் அடிப்படையில் தயாநிதிமாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

பாமகவின் மதுவிலக்கு கொள்கை நாடகம் அம்பலம் என்ற தலைப்பில் உயர்ரக மது பாட்டிலை கையில் பிடித்து கொண்டிருக்கும் படத்தை வைரலாக்கி வரும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் (சன் தொலைக்காட்சி ) சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜய், மற்றும் நியூஸ் 17 வெப் சேனல் ஆகிய மூவர் மீதும் CCP-123/2019..153,505 (1)(b), 505(1)(c), 469,471,..ஆகிய ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது…

ச.விமலேஷ்வரன்