Sun. Oct 6th, 2024

320-ஏக்கர் விவசாய நிலத்தின் நீர்வரத்தை அடைத்து | மினி ஏரியை அமைத்த GRT நகைக்கடை அதிபர்.?|

திருத்தணி அருகே லட்சுமபுரம் பஞ்சாயத்தில் குப்பம் ஏரிக்கு நீர்வரத்தை அடைத்த ஜிஆர்டி நகைக்கடைக்கு சொந்தமான கல்லூரி வளாகம் மற்றும் பண்ணை தோட்டத்தை கண்டித்து விவசாயிகள் தீடிர் சாலை மறியல்..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட லட்சுமபுரம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள குப்பம் ஏரி 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த ஏரிக்கு மிக அருகில் தாசி ரெட்டி கண்டிகை செல்லும் சாலையில் 60-ஏக்கர் பண்ணைத் தோட்டம் உள்ளது இந்த இடமானது பிரபல ஜிஆர்டி.நகைக்கடை அதிபர் ஜி.ராஜேந்திரன் அவரது மேலாளர் பிரபாகரன் ஆகியோரது பெயரில் உள்ளது இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஜிஆர்டி. பண்ணை தோட்டத்தில் காய்கறிகள் கீரைகள் மற்றும் மாடுகள் வளர்க்கப்படுகிறது பண்ணை தோட்டத்திற்கு உள்ளே இன்று அதிகாலை மிகப்பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு 320-அடி நிலத்திற்கு 50-அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு நீர் சேமிப்பதற்காக தோண்டப்பட்டுள்ளது..

இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்தனர் மற்றும் வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவித்தனர் காலை 8-மணி முதல் அத்தனை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தோம் நண்பகல் 12-மணி வரை யாரும் இங்கு வரவில்லை என்று 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட பண்ணை தோட்டம் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து உள்ளே வேலை செய்யும் வண்டிகளை பறிமுதல் செய்ய வேண்டும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அனுமதி இல்லாமல் இவ்வளவு ஆழத்திற்கு தோண்டியது தப்பு மேலும் அனுமதி இல்லாமல் மண் அள்ளியதும் தவறு குப்பம் ஏரிக்கு வரவேண்டிய நீர்வரத்தை அடைத்ததனால் 320- ஏக்கரில் பயிர் செய்யும் விவசாய நிலங்கள் பாதிப்படையும் என்று புகார் கூறி சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர் அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர் அந்த பகுதி வழியாக வரும் ஆம்புலன்சிற்கு வழிவிட்டு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து பண்ணை தோட்டத்து நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைவிட்டனர் மேலும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பண்ணை தோட்டத்திற்கு உள்ளே சென்று இரண்டு லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்வதாக கூறி அந்த வாகனங்களை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர் பொக்லைன் வண்டியை மட்டும் பெரிய லாரி கொண்டு எடுத்து வருவதாக பண்ணை தோட்டத்தில் நிர்வாகிகள் உறுதிமொழி அளித்தனர்…

இருப்பினும் எழுத்துப்பூர்வமாக வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பண்ணை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர் சம்பந்தப்பட்ட குப்பம் ஏரி பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை ஒரு மினி ஏரியை பண்ணைத் தோட்டத்தில் அமைக்க அனுமதி கொடுத்த அதிகாரியார்.? முறையாக நடவடிக்கை எடுக்கப்படுமா.? வாகனங்களுக்கு அபராதம் விதித்தால் போதுமா.? அல்லது பண்ணை தோட்டத்து அதிபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மண்ணை பெரிய அளவுக்கு அள்ளிய குற்றத்திற்கு மாவட்ட கனிமவள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.? இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் என்ன சொல்கிறார்.?

மேலும் நமக்கு கிடைத்த தகவல் :-

இந்த பண்ணை தோட்டத்திற்கு உள்ளே ராமர் பஜனை கோயில் ஒன்று லட்சுமபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோயில் இடம் உள்ளது என்றும் கோயில் இடத்தை மறைத்து போலி டாக்குமெண்ட் மூலமாக விற்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆதாரங்களுடன் திருவள்ளூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நகைக்கடை அதிபர் பண்ணை தோட்டத்து முதலாளி ராஜேந்திரன் மற்றும் இவரது மேலாளர் பிரபாகரன் ஆகியோர்கள் பெயரில் வழக்கு நடைபெற்று வருகிறதாகவும் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்