Wed. Apr 9th, 2025

விஜய் சேதுபதிக்கு ஹெலிகாப்டர் சேவை கொடுத்த சன் பிச்சர்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்தது இவ்விழாவில் விஜய் சேதுபதி மட்டும் தாமதமாக வந்திருந்தார். இந்த தாமதத்திற்கு காரணம் விஜய் சேதுபதி வேறொரு படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாராம் இதனால் வர முடியாத சூழ்நிலைக்கு சென்றுவிட கூடாது என்பதற்காக அவருக்கென தனியாக ஹெலிகாப்டரை அனுப்பி வைத்துள்ளது சன்பிக்சர்ஸ் நிறுவனம். மேலும் விழா முடிந்ததும் அந்த ஹெலிகாப்டரின் மூலமே படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார்…