Sun. Oct 6th, 2024

5-ஆயிரம் கேட்டு பிச்சை எடுத்த பறக்கும் படை அதிகாரி.?? | பணியிடை நீக்கம் என தகவல்.? |

சென்னை ஆவடியை சேர்ந்த ஜெய்குகன் என்பவர் காரில் 50 ஆயிரம் பணம் எடுத்துச் சென்றார் சென்னை ஐசிஎப் வழியாக சென்று கொண்டிருந்த போது பறக்கும் படையினர் காரை வழிமறித்தனர்.

பறக்கும் படையில் இருந்த சென்னை மாநகராட்சி மண்டல உதவி பொறியாளர் பாபு, உதவி ஆய்வாளர் வாசுதேவன், இரண்டு காவலர்கள் உட்பட ஒரு வீடியோ கிராபர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் காரில் இருந்த ஜெய் குகன் என்பவரை விசாரணை செய்ததில் 50 ஆயிரம் பணம் வைத்திருந்தார்.

50,000 பணத்தை பறக்கும் படை அதிகாரி பாபு மிரட்டி கேட்டுள்ளார் அதற்க்கு ஜெய்குகன் 50,000 வரை தாராளமாக எடுத்து செல்லலாம் என்று விதிமுறை உள்ளதே என்று பறக்கும் படை அதிகாரியிடம் கூறினார் ஆனால் பறக்கும் படை அதிகாரி பாபு 25 ஆயிரம் பணம் கொடுத்தால் உன்னை விட்டு விடலாம் என்று கூறினார் ஆனால் ஜெய்குகன் பணத்தை தர மறுத்ததால் ஜெய்குகன் என்பவரை தர தரவேன இழுத்து கொண்டு வில்லிவாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று அங்கு இருக்கும் போலீசாரை வைத்து ஜெய்குகன் என்பவரை மிரட்டினார்.

அதற்கு ஜெய்குகன் என் பணம் இதற்காக நான் உங்களிடம் 25 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார் கடைசியாக பறக்கும் படை அதிகாரி பாபு 5,000 பணம் ஜெய்குகன் என்பவரிடம் கேட்டதாக தகவல்.??

பறக்கும் படை அதிகாரிகளுக்கு பயப்படாமல் ஜெய்குகன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு என்னை தொந்தரவு செய்தால் காவல் நிலையத்தில் தற்கொலை பண்ணி கொள்ளுவேன் என்று கூறினார்.

பயந்து போன பறக்கும் படை அதிகாரி பாபு மீண்டும் ஜெய்குகன் இடம் 2,000 பணம் கேட்ட பறக்கும் படை அதிகாரிகள் மீது பாவம் பட்ட ஜெய்குகன் 2,000 பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தார் பின்னர் இது குறித்து ஜெய்குகன் மத்திய வட்டார துணை ஆணையர் ஸ்ரீதர் இடம் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ததில் ஜெய்குகன் இடம் மிரட்டி 2,000 பணம் வாங்கியது தெரிய வந்தது உடனே பறக்கும் படை அதிகாரி பாபு மீது பணியிடம் நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது…

நமது நிருபர்