Wed. Jan 8th, 2025

வழிப்பறி கொள்ளையர்கள் மூவர் கைது…

பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி உள்பட மூவர் கைது.

சென்னையில் பல இடங்களில் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த கணேசன் வயது 21, மற்றும் அவரது கூட்டாளிகளான கொரட்டூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் வயது 20, விஜயகுமார் வயது 20 ஆகியோரை ஐசிஎப் குற்றப்பிரிவு ஆய்வாளர் காமேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை பாண்டி பஜாரில் வழிப்பறி செய்த செல் போன்களை விற்பணை செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் தொடர்ந்து ஐ.சி.எப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கணேசன் மீது செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு , கொரட்டூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் உள்ளது.

மேலும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்