பெண்களிடம் கத்தியை காட்டி நகை பறிக்கும் கும்பல் கைது…
வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காண்பித்து மிரட்டி நகை பறித்து சென்ற கும்பல் கைது..!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்டத்தில் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டியூர் கிராமத்தில் கடந்த 7ஆம் தேதி அன்று வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான மாடி வீட்டில் பின் வாசல் கதவை உடைத்துகொண்டு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வீட்டினுள் புகுந்து அனைவரும் உறங்கி கொண்டு இருந்த நேரத்தில் அனுசுயா மற்றும் சிந்துஜா ஆகிய பெண்களை எழுப்பி கத்திகளை காட்டி மிரட்டி அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் உள்ள மற்ற நகைகளையும் சேர்த்து சுமார் 14 பவன் மதிப்பிலானவையை பறித்து சென்றனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியன் மற்றும் காமராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடிவந்த நிலையில் நேற்று சந்திக்கும்படி நான்கு நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து எதோ திட்டம்போடுவதாக தகவல் போலீஸாருக்கு வந்ததையடுத்து அங்கு விரைந்தனர்.
விசாரித்ததில் மேற்பட்ட குற்றவழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
மேலத்தெருவை சேர்ந்த ரஞ்சித்/20, விஜயகுமார்/32, சித்தமல்லியை சேர்ந்த கார்த்தி/20 மற்றும் ஆனந்தராஜ்/20 ஆகிய கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளிடம் இருந்த 14- சவரன்
தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்…
நிருபர் ராம்