Sun. Oct 6th, 2024

கிராம மக்களின் சேமிப்பு கணக்கில் இருந்த 50 லட்சத்தை மோசடி செய்த | தபால் நிலைய ஊழியர்கள் |

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள திங்களூர் தபால் நிலைய அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் சேமிப்பு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது கணக்கை சரிபார்க்க திரண்டனர்…

இதில் 50 லட்சத்திற்கும் அதிகமான பணம் கையாடல் செய்து இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

திங்களூர் தபால் நிலையத்தின் கிளை அஞ்சல் நிலையமான வெட்டயங்கிணறு பகுதி நேர அஞ்சல் நிலையம் உள்ளது இங்கு ( செல்வராஜ் ) என்பவரும் ( பஞ்சையன் ) என்பவரும் தபால் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்…

திங்களூரை தபால் நிலையத்தை சுற்றி வெட்டயங்கிணறு, தாண்டா கவுண்டன்பாளையம், கரட்டாங்காடு, மணியாரம் பாளையம், கரிச்சிபாளையம், சுன்காரம்பாளையம், கணபதி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இங்குள்ள தபால் நிலைய ஊழியரான செல்வராஜ் கடந்த 25- ஆண்டுகளாக உள்ளூரிலேயே பணிபுரிந்து வந்ததால் இவர் மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர் இதனால் வெட்டையங்கிணறு கிளை அஞ்சல் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்ட புதிய கணக்குகளை மக்கள் தொடங்கி பணம் கட்டி வந்தனர்…

ஒரு கட்டத்தில் வங்கி கணக்கு புத்தகத்தை அவரிடமே கொடுத்து பணத்தையும் டெபாசிட் செய்துள்ளனர் இதில் 130க்கும் மேற்பட்ட டெபாசிட் என்று செல்லக்கூடிய நிரந்தர வைப்பு நிதியும் அடக்கம் இந்த கணக்கில் பெரும்பாலான பொது மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு தபால் நிலையத்தில் பணமே செலுத்தப்படவில்லை…

வைப்பு நிதி என்பதால் பல வருடங்களாக யாரும் இதனை கவனிக்கவில்லை இது தவிர மாதாந்திர சேமிப்பு தொகையாக தலா 1000 ரூபாயை 650க்கும் மேற்பட்டோரிடமும் வசூல் செய்துள்ளனர் இதனையும் முறையாக கணக்கில் செலுத்தவில்லை மேலும் 550 க்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்கும் துவங்கி கொடுத்து கணக்கு புத்தகத்தை தானே வைத்துக்கொண்டார்…

பொதுமக்கள் பணம் செலுத்த வரும்போது அவர்கள் முன்னிலையில் கணக்கு புத்தகத்தில் எழுதி தொகையை வரவு வைத்து விட்டு கணக்கு புத்தகத்தை தானே வைத்துக்கொள்வார் அவர்கள் சென்றதும் அதே பணத்தை அப்படியே திருப்பி எடுத்துக்கொண்டு விடுவார்கள் பாலிசி கணக்கு தொகையை கூட விட்டு வைக்காமல் எடுத்துள்ளனர் இந்நிலையில் கடந்த மாதம் செல்வராஜ் உடன் பணி புரியும் பஞ்சையன் திடீரென பணத்தை கையாடல் செய்ததாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த தகவலை பொதுமக்களிடம் தெரிவிக்காமலே தபால் துறையினர் அலட்சியமாக விட்டுவிட்டனர் தற்போது வைப்பு தொகை முதிர்வடைந்து பணம் எடுக்க வந்த மூதாட்டி ஒருவரின் பணம் கணக்கில் இல்லாததால் செல்வராஜை கேட்டுள்ளனர் அதற்கு அவர் ஏற்கனவே இருந்த ஊழியர் கையாடல் செய்து விட்டதாகவும் எனக்கு ஏதும் தெரியாது என கூறியுள்ளார் இதனால் பணம் செலுத்திய அனைவரும் திங்களூர் தபால் நிலையத்தில் வந்து சோதனை செய்து பார்த்தபோது ஒவ்வொருவர் கணக்கிலும் வெறும் 100 ரூபாய் மட்டுமே இருந்தது பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் கண்ணீருடன் பணம் இல்லாத வங்கி கணக்கு புத்தகத்தை வைத்து பணம் திரும்ப வருமா..? என அதிகாரிகளை கேட்டனர் அப்போது அங்கே வந்த அஞ்சலக மக்கள் குறை தீர்க்கும் அதிகாரி லாவண்யா வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டு தபால் நிலையத்தில் கட்டாமல் இருக்கும் தொகையை மட்டுமே தவறு செய்தவர்களிடம் வசூலிக்கமுடியும் மற்ற தொகைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என கூறினார் ஆனாலும் இது வரை பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த செல்வராஜ் கிடைத்து விடும் பொறுங்கள் என பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பண மோசடி பொதுமக்களின் வாக்குமூலத்தை வைத்து பார்க்கும் போது கையாடல் செய்திருப்பது சுமார் 50லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிகிறது…

நிருபர் சண்முகசுந்தரம்