Sun. Oct 6th, 2024

பணம் மற்றும் தங்க காசுகளை வழிப்பறி செய்த | போலி போலீஸ் |

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ் என கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் மற்றும் தங்க காசுகள் வழிப்பறி மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.

கணபதி சுப்பிரமணியம் வயது 54 இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த இருவர், கணபதியிடம் நாங்கள் போலீஸ் என்று அறிமுகமாகி உங்களை விசாரிக்க வேண்டும் என்று அழைத்துச் சென்றனர்.

பின்பு கணபதியை மிரட்டி அவரது ஏடிஎம்மில் இருந்து 10000 ஆயிரம் ரொக்கம் எடுத்துள்ளனர்.

பின்பு கணபதியை மிரட்டி சென்னை திருமங்கலம் அழைத்துச் சென்று டெபிட் கார்டை பயன்படுத்தி 27- ஆயிரத்துக்கு தங்க காசு வாங்கிக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஒட்டம்.

இது குறித்து கணபதி சுப்பிரமணியம் கோயம்பேடு சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் போலி போலீசாரை வலை வீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் டிஜிபி உளவுத்துறை என்று சொல்லி கோயம்பேடு போலீசாரை ஏமாற்றியவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளை, போலி போலீசார் நடமாட்டம் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் நிற்பதற்கு பயந்து வருகிறார்கள் மீண்டும் போலி போலீசார் நடமாட்டம் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் அதிகரித்து வருவதால் கோயம்பேடு போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

நமது நிருபர்