Tue. Jan 7th, 2025

வழிப்பறி கொள்ளையை தடுக்க, தனிப்படை அமைப்பு | 4 பேர் கைது |

மாதவரம் மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையை தடுக்கும் விதமாக மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் அன்டாலின் ரமேஷ் மற்றும் முகமது புஹாரி ஆகிய இருவர் தலைமையில் தனித்தனியே தனிப்படை இரண்டை அமைத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான… மதுரை மாவட்டத்தை சேர்ந்த கவாஸ்கர்(எ)குரு/34 , பனியராஜ்(எ) ஒற்றைகண் பாண்டியராஜன்/33 ஆகிய இருவரின் மீது சென்னையில் பல காவல்நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் ஏற்கனவே உள்ளனர்.

இரண்டாவதாக பிடிப்பட்ட இரு குற்றவாளிகளான எர்ணாவூர் சென்னையை சேர்ந்த ராஜீ/32 மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாமணி(எ) தீனா/33 ஆகிய இவ்விருவரை கைது செய்ததில், இவர்கள் தேடப்படும் பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தகவல்.

இந்த நான்கு குற்றவாளிகளையும் கைது செய்த அவர்களிடமிருந்து மொத்தம் சுமார் 40 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் யமஹா Fazer என்ற ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.