உதவி ஆய்வாளர் கழிவுநீர் லாரி ஓட்டுனரை மிரட்டி | கட்டிங் கட்டப்பஞ்சாயத்து |
சென்னை அண்ணா நகர் கழிவு நீர் லாரி ஓட்டுபவர் வேல்முருகன் இவர் இன்று மாலை 4:30 மணி அளவில் அண்ணா நகர் டவர் பூங்கா அருகே கழிவு நீர் அகற்றும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.
பின்னர் வேலை முடித்து விட்டு டீ சாப்பிட வந்துள்ளனர் அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற கார் கழிவு நீர் அகற்றும் பைப் மீது ஏறியதில் கழிவு நீர் பைப்பு உடைந்தது.
உடனே ஓட்டுனர் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு ஒடி வந்து பார்த்ததில் பைப்பு உடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்.
கார் ஓட்டி வந்த நபர்களிடம் பைப் வாங்கி தர வேண்டும் இல்லை என்றால் என் சம்பளத்தில் பிடித்து விடுவார்கள் என்று கூறினார்…
ஆனால் கார் ஓட்டி வந்தவர் என்னால் வாங்கித்தர முடியாது நீ எங்குவேண்டுமானாலும் சென்று சொல் என்றும் மிரட்டி விட்டு அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு ரோந்து வாகனத்தில் வந்த அண்ணா நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் வயது 56 என்பவர் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டினார் பின்பு கார் ஒட்டுனருக்கு சாதகமாக பேசி ஊழியர் ஓட்டுனர் வேலு முருகனை மிரட்டியும் பணம் ஒன்றும் வாங்கி கொடுக்க முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று மிரட்டியவுடன்..
பயந்து போன லாரி ஓட்டுனர் வேல்முருகன் நடு ரோடு என்றும் பார்க்காமல் உதவி ஆய்வாளர் இடம் கூற கார் ஒட்டி வந்த நபர்களிடம் கட்ட பஞ்சாயத்து செய்து 4,000 வாங்கி கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் ஓடி விடு என்று நடு ரோட்டில் மிரட்டினார் ஆனால் பைபின் மதிப்பு 20,ஆயிரம் என்றும் இதனால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுனர் வருத்தத்துடன் அங்குள்ளவர்களிடம் புலம்பி கொண்டே சென்று விட்டார் உடனே உதவி ஆய்வாளர் கண்ணன் கார் ஓட்டி வந்த நபர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி விட்டார்…
நமது நிருபர்