குடோனில் தீ விபத்து | தீ பற்றியதா அல்லது பற்றவைக்கப்பட்டதா…? |
சென்னை ஜெ.ஜெ.நகரில் கார் பழுதுபார்க்கும் குடோனில் தீ விபத்தில் 9 கார்கள் உட்பட வாகனங்கள் தீ விபத்தில் சேதம் ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை.
சென்னை ஜெ.ஜெ.நகர் கோல்டன் ஜார்ச் ரத்தினம் ரோடு என்ற முகவரியில் இரும்பு சீட்டால் போடப்பட்ட பெரிய குடோனினை மூன்றாக பிரித்து, அதில் கார்த்திகேயன் எம்.எஸ். ஆட்டோ கேரேஜ்ம், பால்ராஜ் ஏ.எஸ்.மோட்டார்ஸ் பெயிண்டிங் கடையும், விஜய் என்பவர் கார் என்ற மெக்கானிக் கடையையும் நடத்தி வருகிறார்.
25ம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் கடைகளை பூட்டிவிட்டு சென்ற நிலையில் இன்று அதிகாலை 03.00 மணியளவில் திடீரென் தீப்பிடித்து எரிந்தன.
உடனே ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஜே.ஜே நகர், கோயம்பேடு தீயணைப்பு வாகனத்தில் வந்து சுமார் இரண்டு மணி நேரமாக தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 9 கார்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் எரிந்து நாசமாயின.
வழக்கு பதிவு செய்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா..?
முன் விரோதமா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்