திருத்தணியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம்…!!??
திருத்தணியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கான பாமக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்..
அவர் பிரச்சாரம் மேற்கொண்ட கமலா திரையரங்கம் அருகில் தேர்தல் விதிமுறையை மீறி மூடப்படாமல் இருந்த ராஜீவ் காந்தி சிலை..
எடப்பாடி பழனிச்சாமி திருத்தணிக்கு வருகை தருவதை ஒட்டி திருத்தணிக்கு சென்னையிலிருந்து மற்றும் திருப்பதி, வேலூரில் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணி பஸ் நிலையத்திற்கு வர வேண்டிய பேருந்துகள் அனைத்தும் கமலா திரையரங்கம் வழியே வராமல் தடுத்து நிறுத்தப்பட்டு நத்தம் என்ற கிராமத்தின் வழியாகவும் இந்திரா நகர் பகுதி வழியாகவும் திருத்தணி பஸ் நிலையத்திற்கு பேருந்துகளை அனுமதித்து வந்தனர். இதனால் பஸ் நிலையம் வரமுடியாமல் ரயில் நிலையம் வர முடியாமல் பயணிகள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து மிகுந்த சிரமம் அடைந்தனர். இதேபோல் பஸ் ரூட் மாற்றப்பட்டது தெரியாமல் கமலா திரையரங்கம் அருகே இருந்த பஸ் நிறுத்தம் பகுதியில் மக்கள் காத்திருந்தனர். திருத்தணி டிஎஸ்பி சேகரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்..
திருத்தணி பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு திருத்தணி அவைத்தலைவர் குப்புசாமி, திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டம் ஆவின் சொசைட்டி தலைவர் சந்திரன் ஆகியவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் திருப்பதி பிரசாதம் கொடுத்து ஒரு பகுதியில் வரவேற்பு கொடுத்தனர்..
இரண்டாவதாக அமைச்சர்கள் பெஞ்சமின் பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் ரமணா மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கும்மிடிப்பூண்டி விஜயகுமார், பொன்னேரி பலராமன், திருத்தணி நரசிம்மன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி, திருத்தணி கோயில் தக்கார் ஜெய்சங்கர் ஆகியோர்கள் திருத்தணி மலைக்கோயில் அடிவாரத்தில் பிரசாதம் கொடுத்து, பூங்கொத்து கொடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்து கமலா திரையரங்கம் அருகே வழி அனுப்பினர்.
வரும் வழியில் மூன்றாவது வரவேற்பாக தணிகாசலம் அம்மன் ஆலயத்தில் மாவட்ட மாணவரணி பொருளாளர் ராகவேந்திரா அவரது ஆதரவாளர்களுடன் மூன்றாவது வரவேற்பு கொடுத்தார். மொத்தத்தில் முதல்வருக்கு 3 குழுக்களாக பிரிந்து வரவேற்பு கொடுத்ததன் மூலம் அதிமுக மூன்று குழுக்களாக செயல்படுவது திருத்தணி மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்தது…
நமது நிருபர்