மணலியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் | ரூபாய் 5-லட்சம் பறிமுதல் |
தேர்தல் விதிமுறைகள் தமிழகத்தில் அமுல்படுத்தியுள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பணமோ அல்லது பொருட்களோ கொண்டுசெல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அவ்வாறு கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்களில் கையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் போலீசாரும் தீவிர வாகன தணிக்கை சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன் விளைவாக தமிழகம் முழுவதும் தங்கம் வெள்ளி உள்ளிட்ட பல கிலோ எடையுள்ள பொருட்கள் மற்றும் பல கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கைப்பற்றப்பட்ட பணம் அல்லது பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் காண்பிக்கும் பட்சம் அவை திருப்பியும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னை மணலி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் போலீசாரும் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக உரிய ஆவணங்கள் இன்றி ரூ 5 லட்சம் கொண்டு சென்றவர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து ரூ.5 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்தவர் பெங்களூரை சேர்ந்த சந்திரசேகர் ரெட்டி என்று தெரியவந்துள்ளது. அவரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக கைப்பற்றப்பட்ட தொகை மண்டலம் 5ல் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைப்பட்டுள்ளது…
நமது நிருபர்