Fri. Dec 20th, 2024

தேர்தல் அதிகாரியை தாக்க வந்த | அதிமுக பிரமுகரை தப்பிக்க வைத்த போலீசார் |

சென்னை நொளம்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரியை தாக்க வந்த அதிமுக பிரமுகரை தப்பிக்க விட்ட நொளம்பூர் போலீசார்..?

கார் ஒட்டுனரை மட்டுமே கைது செய்தனர்…

சென்னை நொளம்பூர் முகப்பேர் மேற்கு போலீஸ் பூத் அருகே நேற்று இரவு 11:30 மணி அளவில் அம்பத்தூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பத்மாநாதன் மற்றும் நொளம்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் அந்த வழியாக இன்னோவா வாகனத்தில் அதிமுக கட்சி கொடியுடன் வந்தார் இதை பார்த்த பறக்கும் படை போலீசார் வழி மறித்தனர்..

காரில் இருந்த முகப்பேர் மேற்கு தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர்
தேவ நீதி வயது 49 இவர் தேர்தல் அதிகாரி பத்மாநாதன் இடம் எனது வாகனத்தை எப்படி வழி மறுப்பீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேர்தல் அதிகாரியை தாக்க வந்தார்.

உடனே அங்கிருந்த நொளம்பூர் போலீசார் அதிமுக பிரமுகர் நீதியை நைசாக தப்பிக்க வைத்து விட்டார்கள்…?

இவருடன் வந்த முகப்பேரை சேர்ந்த ஓட்டுநர் ஸ்ரீதரை மட்டும் கைது செய்தனர்.

தேர்தல் அதிகாரியை தாக்க வந்த அதிமுக பிரமுகரை தப்பிக்க வைத்து விட்டு அவரின் காரை மட்டும் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் அதிகாரியை தாக்க வந்த அதிமுக பிரமுகரை நொளம்பூர் போலீசார் தப்பிக்க வைத்தது அப்பகுதி மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டது…

நமது நிருபர்