தேர்தல் விதிமுறைகளை மீறிய…??!!| திருத்தணி காவல்துறை மற்றும் நகராட்சி |
திருத்தணியில் (24 மார்ச்) இன்று மாலை அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பாமகவைச் சேர்ந்த மூர்த்தி அவர்களை ஆதரித்து
திருத்தணி கமலா திரையரங்கு அருகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். அதனால் அந்த பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து வெளிவரும் பயணிகள் யாரும் வரக்கூடாது என்று அந்த பாதையை இன்று காலை முதல் காவல்துறையினர் அடைத்து விட்டனர். இதனால் ரயில் நிலையத்திலிருந்து வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் வியாபாரிகள் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருக்கும் இந்த நேரத்தில் பொது மக்களுக்கு எவ்வளவு பெரிய இடையூறுகளை காவல்துறையினர் ஏற்படுத்துகின்றனர். டி.எஸ்.பி.சேகர் அவர்கள் தலைமையிலான போலீசார்…
தேர்தல் விதிமுறையை மீறி இதுநாள் வரையிலும் அங்கு ராஜீவ் காந்தி சிலை திறந்திருக்கும் காட்சியை படத்தில் காணலாம்..!!!
இதுதவிர இரவோடு இரவாக அனுமதியில்லாமல் கிராவல் மணல்களை அள்ளி வந்து அவசரம் அவசரமாக இந்த பகுதிக்கு புதிய சாலை அமைத்து வருகின்றனர்..?
பேராண்மை