Sun. Oct 6th, 2024

வெல்ஃபேர் கட்சியின் தலைமையில் பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

(23-03-2019) வெல்ஃபேர் கட்சி தலைமையில்
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் இணைந்து “பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான” கண்டன ஆர்ப்பாட்டம்…..

டெல்லி -ல் மாணவி “நிர்பயா” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதை ஒட்டி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு அறிவித்த பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை எள் அளவும் மதிக்காமல் காலில் போட்டு மிதித்து 7 ஆண்டுகளாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், போலீஸ் எஸ்.பி பாண்டியராஜன், போலீஸ் டி.எஸ்.பி ஜெயராமன் ஆகியோரின் கூட்டுத் துணையுடன் பல நூறு பெண்களின் வாழ்வை சீரழித்து சூறையாடியதை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெல்ஃபேர் கட்சி தலைமையில்,
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், இணைந்து “பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான” கண்டன ஆர்ப்பாட்டம்….. நடத்தப்பட்டது.

இதில்…. டெல்லி நிர்பயா வழக்கில் ஜெயலலிதா அரசு அறிவித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே தீவிரப்படுத்த வேண்டும்.

போஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து முடிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

போலீஸ் எஸ்.பி பாண்டியராஜன் பொள்ளாச்சி டி.எஸ்.மி ஜெயராமனை பணி நீக்கம் செய்து., கைது செய் வேண்டும்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிக் கேட்டு  போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

மக்களுக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என பூச்சாண்டி காட்டுவதை உடனே நிறுத்த வேண்டும்.,

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை வெல்டர் கட்சியின் மாநில செயலாளர் முகமது கவுஸ் தலைமை தாங்கினார்.,

வெல்ஃபேர் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜரினா ஜமால்., சமூக செயல்பாட்டாளர்
எழுத்தாளர் கொற்றவை, பொது நல மாணவர் எழுச்சி இயக்க தோழர் வளர்மதி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் அமிர்தா, திராவிட விடுதலைக் கழக தோழர் உமாபதி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி தோழர் வெற்றி ஆகியோர் கண்டன உரையாற்றினர்….

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக வெல்ஃபேர் கட்சியின் மாவட்ட துணை தலைவர் தோழர் சுலைமான் நிறைவு உரையாற்றினார். ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தோழர் அருண் நன்றியுரையாற்றினார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.