Fri. Dec 20th, 2024

போதையில் சாலையோர நடைமேடையில் கார் ஓட்டிய வழக்கறிஞர்

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகே நேற்று இரவு கார் ஒன்று மிக வேகமாக சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அங்கு அருகில் உள்ள நடைமேடை பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்பட்டிருந்த பெரிய கல்லின் மீது மோத அந்த கார் முன்பகுதி முற்றிலுமாக சேதமைந்தது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து காவலர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த காரை ஒட்டி வந்தது உயர்நீதி மன்ற வழக்கறிஞர் உதயக்குமார் என தெரிய வந்தது. மேலும் அவர் குடிபோதையில் இருந்தும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இந்த சம்பவத்தின் போது அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.