நெஞ்சு வலி காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் | பேரறிவாளன் அனுமதி |
நெஞ்சு வலி காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் | பேரறிவாளன் அனுமதி |
ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் இன்று காலை திடீர் நெஞ்சு வலி காரணமாக ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் எப்போது அவர் மீண்டும் சிறைக்கு திரும்புவார் உள்ளிட்டவை குறித்து நாளை அவர் உடல் நிலையை பரிசோதித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை தலைவர் பொன்னம்பல நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுநீரக தொற்று தொடர்பாகவும் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுநீரக தொற்று காரணமாக பேரறிவாளன் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடதக்கது…
நமது நிருபர்