Fri. Dec 20th, 2024

TIK TOK மூலம் பெண்ணை ஏமாற்றி விட்டு | நண்பரை கொலை செய்தவர் கைது |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் தனது மகன் சுந்தர மகாலிங்கம் என்பவர் கடந்த 20ம் தேதி முதல் காணாமல் போனதாக வழக்கறிஞர் மூலம் அருப்புகோட்டை விவி.நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் புகார் ஒன்றை அளித்தார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் காணாமல் போனதாக போஸ்டர்களும் பிரசூரங்களும் செய்தி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பதிவு செய்து வலைவீசி தேடினர்.

இதற்கிடையில் கஞ்சாநாயக்கன்பட்டி கிராமம் அருகே உள்ள கல்குவாரியில் ஒரு ஆண் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அங்கு ஒரு ஆண் சடலம் கயிறால் கட்டபட்டு கல்குவாரியில் உள்ள ஏரியில் மிதந்தபடி கிடந்தது பிரதேத்தை கைபற்றிய காவல்துறையினர் மகன் காணாமல் போனதாக புகார் அளித்த பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மனைவியிடம் பிரேதத்தை காண்பித்து உறுதிபடுத்தினர்.

பிறகு காணாமல் போனதாக பதிவு செய்த புகார் மீது கொலை வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியத்திடம் விசாரித்ததில் தனது மகன் சுந்தர மகாலிங்கமை 20ம் தேதி இரவு அன்று அதே பகுதியை சேர்ந்த அவனது நண்பர்கள் பிரபாகர் (எ) போராளி, ரமேஷ்(எ) ஸ்டீஃபன் அழகுராஜா, மற்றும் மாதவன் ஆகிய நால்வர் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாகவும் அதன் பிறகு காணவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை போன்ற இடங்களில் குற்றவாளிகளை தேடி வந்த போது கொல்லிவீரன்பட்டி என்ற இடத்தில் பிரபாகரனை கண்டு பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் தனது மூன்று கூட்டாளிகளுடன் சுந்தர் மஹாலிங்கத்தை கஞ்சா மது வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து சென்று கழுத்தை அறுத்தும் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு கயிற்றால் கட்டிபோட்டு கல்குவாரியில் கிடந்த ஏரியில் வீசிவிட்டு தப்பி சென்றதாக ஒப்புக்கொண்டார்.

டிக் டாக் செயலி மூலம் ஏற்கனவே திருமணமான குற்றவாளி பிரபாகரன் தனது திருமணத்தை மறைத்து டிக்டாக் செயலி மூலம் அறிமுகமாகிய புதிய பெண்ணுடன் பழகி மேட்டுபாளையத்தில் ஒன்றாக குடியிருந்து வந்த நிலையில் அங்கு தங்கி செல்ல வந்த சுந்தர் மகாலிங்கம், பிரபாகரனின் புதிய காதலியிடம் பழக முற்பட்டு பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமான உண்மையை கூறி பிரபாகரன் மீது திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் கூறியதன் விளைவாக ஆத்திரம் அடைந்து சுந்தர மஹாலிங்கத்தை தீர்த்து கட்ட தனது மூன்று கூட்டாளிகளின் உதவியுடன் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

மேலும் கொலையை மறைக்க பல்வேறு முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார் பிரபாகரனுடன் சேர்த்து இந்த வழக்கில் தொடர்புடைய மீதம் மூன்று குற்றவாளிகளையும் அருப்புக்கோட்டை காவல் உதவி ஆணையர் வெங்கடேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் சந்தோஷ் கொண்ட தனிப்படையினர் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்…

நிருபர் வெ.ராம்