ரயில்வே இருப்பு பாதையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் |கோடம்பாக்கம்- மாம்பலம்
சென்னை கோடம்பாக்கம்- மாம்பலம் இடையே ரயில் இருப்பு பாதையில் அடையாளம் தெரியாத ஆண் நபர் சடலம் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து ரயிலில் பயணம் செய்யும் சிலர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரயில்வே போலீசார் இறந்த கிடந்த நபர்
யார் என்றும் எந்த ஊர் என்கின்ற எந்த விபரமும் இதுவரை கிடைக்கவில்லை..
மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குடிபோதையில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற பல கோணங்களில் மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்…
நமது நிருபர்