காவல் நிலைய அருகே பிளேடுபோட்டு நகை பறிப்பு | காவல்துறையினர் அலட்சியம் |
காவல் நிலைய அருகே பிளேடுபோட்டு நகை பறிப்பு | காவல்துறையினர் அலட்சியம் |
சென்னை கோயம்பேடு காவல் நிலையம் எதிரில் பெண் கை பையை பிளேடால் அறுத்து 6 சவரன் நகை பறிப்பு.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த நாகலட்சுமி வயது 48. இவர் நேற்று உறவினர் விட்டிற்கு செல்ல கோயம்பேடு காவல் நிலையம் எதிரில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார். பின்னர் S60 சிற்றுந்தில் ஏறும் போது கையில் வைத்திருந்த பையை பிளேடால் கிழித்து கொள்ளையர் தப்பி ஒட்டம். அதில் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி பக்கத்தில் உள்ள சிஎம்டி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் நகை, பை போன்ற உங்கள் உடமைகளை பத்திரமாக நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும். இந்த இடம் அதிகம் குற்றம் சம்பவங்கள் நடக்கும் இடம் என்று போலீசார் கூறும்போது, நகையை பறிகொடுத்த நாகலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் கோயம்பேடு போலீசார் புகார் கொடுத்த வந்தவரிடம் ஆறுதல் சொல்லாமல் புகாரை வாங்கிக் கொண்டு அலட்சியமாக பேசியது தனக்கு மிகவும் மன வேதனையாக இருந்ததாக தெரிவித்தார்…
இதைப்பற்றி பாதிக்கப்பட்ட நாகலட்சுமி கூறுகையில்.
காவல் நிலையம் முன்பு இந்த வழிப்பறி நடந்தது அதிர்ச்சியாக உள்ளது. மக்களுக்கு போலீஸ் தான் பாதுகாப்பு காவல் நிலையம் முன்பு இந்த திருட்டு சம்பவங்கள் நடந்தால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்குமா என்கிறார்…