Fri. Dec 20th, 2024

அரசு பணிக்கு போலி ஆவணம் தயாரித்த | அமைச்சரின் உதவியாளர் கைது?? |

அரசு பணிக்காக போலி ஆவணம் தயாரித்த | அமைச்சரின் உதவியாளர் கைது?? |

மருந்தாளுனர் (Pharmacist) பணிக்கு போலி ஆவணம் தயாரிக்கும் அமைச்சரின் உதவியாளர்…

தமிழகத்தில் மருத்துவ துறையில் மருந்தாளுனர் (Pharmacist) பணியில் கிட்டத்தட்ட 353- காலியிடங்களை நிரப்ப அரசு எழுத்துத் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்டு, அதற்கான ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் 25-03-2019 என்று கூறியது.

இந்த பணிக்கு தமிழகத்தில் உள்ள எத்தனையோ பேர் முயற்சி செய்து கொண்டு இருக்க…குறுக்கு வழியில் வேலையில் சேர்ந்துவிட, அதுவும் ஒரு பெரிய மனிதரின் ஒப்புதலுடன் வேலை நடக்கிறது.

புதுக்கோட்டையில் கார்த்திகேயன் என்பவர் எப்படியாவது மருந்தாளுனர் (Pharmacist) பணயில் சேர்ந்துவிட வேண்டு என்று முடிவு செய்து, அதற்கு தன்னை தகுதி படுத்திக்கொள்ள போலி ஆவணங்களை தயாரிக்க முடிவு செய்ய அதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் விக்கி என்ற விக்னேஸ்வரன் கார்த்திகேயனிடம் ரூபாய் 3 லட்சம் பெற்றுக்கொண்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரின் கையெழுத்தை போலியாக பதிவிட்டு போலி ஆவணங்களை தயாரித்துள்ளார்.

பின் இதை அறிந்த அரசு கல்லூரி முதல்வர் திரு.மீனாட்சி சுந்தரம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கார்த்திகேயன், விக்னேஸ்வரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பிராபாகரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்…

பேராண்மை.காம்