ரயில் நிலையத்தில் 4.5 தங்க பிஸ்கட்டும் | 17 கிலோ வெள்ளி தங்க சாலையிலும் பிடிபட்டது |
சென்னையில் 4.5 கிலோ தங்கம் உட்பட 17 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல்….
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி ஆலப்புழா விரைவு ரயிலில் கேரள மாநிலம் திருச்சூர்க்கு கடத்த முயன்ற 4.5 கிலோ தங்க பிஸ்கட்டுகளை சென்ட்ரல் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டதில், அவர்களது இடுப்பில் தங்க பிஸ்கட்டுகளை கட்டி இருந்ததாக கூறப்படுகிறது.அங்கு இருந்த மற்ற மூன்று நபர்களையும் விசாரித்ததில் அவர்களும் தங்க பிஸ்கட்டுகளை பதுக்கி வைத்திருந்தனர். அதில் ஒருவரிடம் மட்டும் முறையான ஆவணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த லிக்கோ, சனில், மற்றும் புதுகோடு பகுதியே சேர்ந்த பிரகாசன்,பாலக்காடு பகுதியை சேர்ந்த சத்யபாலன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னையில் ஒரு நகைகடையில் தங்க பிஸ்கட்டுகளை வாங்கிக்கொண்டு கேரளா கொண்டு சென்று அதனை நகைகளாய் மாற்றி விற்பனை செய்வதற்கு எடுத்து சென்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் கைப்பற்றபட்ட தங்க பிஸ்கெட்டுகளை சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் முன்னிலையில் ரயில்வே காவல் துறையினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதேப்போல்
சென்னை வால்டாக்ஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது அதில் 17 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. அதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என்று பறக்கும்படையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது . இதனையடுத்து 17 கிலோ வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.