எட்டு காவல் நிலையங்களில் | தேடிவந்த குற்றவாளி கைது |
எட்டு காவல் நிலையங்களில் | தேடிவந்த குற்றவாளி கைது |
திருச்சி உறையூரில் வீடு புகுந்து திருடும் கொள்ளையன் கைது 10-லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் இரவு நேரங்களில் வீடுகளில் தொடர் திருட்டு கடந்த ஜனவரி 5ம் தேதி மற்றும் கடந்த மாதம் 9ம் தேதியும் வெவ்வேறு வீடுகளில் திருட்டு நடந்துள்ளதாக உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையில் நடத்திய காவல்துறை சம்பவ இடத்தில் இருந்த அனைத்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஏதோ ஒரு சிசிடிவி பதிவில் குற்றவாளியின் முகம் தெரியும் பதிவுகளை வைத்து தீவிர தேடுதலுக்கு பிறகு மதுரையை அரவிந்த நகர், சேர்ந்த செல்வராஜ் /54 என்ற குற்றவாளியை பிடித்து விசாரணை நடத்தியதில் செல்வராஜ் ஒரு கொலையாளி என்றும் இவர் மீது ஏற்கனவே கோவை- கோவில்பாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதாகவும் மேலும் மகாலிங்கபுரம், நாகமம் ஆனைமலை, அன்னூர், சிங்கநல்லூர், காரமடை என பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது
மேலும் திருச்சியில் திருடியது ஒப்புக் கொண்ட செல்வராஜை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 92 சவரன் (736 கிராம்) எடை கொண்ட சுமார் 10 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் தனிப்படையினர் உதவியோடு பறிமுதல் செய்தனர்…
நிருபர் வெ.ராம்