12வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ??| மூவர் கைது |
12 வயது சிறுமிக்கு 3 பேரால் பாலியல் தொல்லை | சென்னை ஆர்.கே நகரில்….
12-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறி தாய் போலீஸில் புகார்.சென்னை ஆர்.கே நகரில் உள்ள பாரதி நகரை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பெண்ணின் தாய் ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் 3 நபர்களில் ஒருவர் அப்பகுதியில் கிறிஸ்துவ மத போதனை செய்பவர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இதுபோல் பல சம்பவங்கள் இங்கு அதிக அளவில் அரங்கேறி வருவதாலும், பொள்ளாச்சி சம்பவத்தை போல் இனி எங்கும் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.