மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேர் திருவிழா | பக்தர்கள் கோலாகலம் |

கபாலீஸ்வரர் கோயில் தேர் திருவிழா | பக்தர்கள் கோலாகலம் |
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி, தினமும் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இந்த நிலையில்,விழாவின் முக்கிய நாளான இன்று தேர் திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் உற்சவருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன இன்று காலை 5 மணிக்கு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் அர்ச்சனைகள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, தேரோட்டம் தொடங்கி சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்,தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.



மயிலை கபாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் கோயிலை சுற்றிலும் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்…