Sat. Dec 21st, 2024

குழந்தை இல்லை என தற்கொலை செய்துகொண்ட கூலித் தொழிலாளி…

குழந்தை இல்லை என தற்கொலை செய்துகொண்ட கூலித் தொழிலாளி

சென்னை நெற்குன்றத்தில் திருமணமாகி குழந்தை இல்லை என மன வேதனையில் கூலித்தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை.

சென்னை நெற்குன்றம் சி.டி.என் நகர் சேர்ந்த லோகேஷ் குமார் வயது 33 இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை என இவருக்கும் மனைவி மகேஸ்வரிக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கம். ஒருகட்டத்தில் கணவன் மனைவி இருவருக்குமிடையே சண்டை முற்றியதில் மகேஸ்வரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் ஒரு மாதமாக தனிமையில் வாழ்ந்து வந்த லோகேஷ் குமார் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அதைப் பார்த்த லோகேஷ் குமாரின் அண்ணை் ரமேஷ் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நமது நிருபர்