என்கவுண்டர் பயத்தை ஏற்படுத்தி ரவுடிகளை கைது செய்த போலீசார்..!!!
சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் குற்றவழக்கில் தொடர்புடய ரவுடிகள் தங்கியிருப்பதாக நுண்ணறிவு போலிசார் மூலம் தகவல் ஐ.சி.எஃப் போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது நேற்று இரவு ஆய்வாளர் ராயப்பன் தலைமையில் தனிப்ப்டை ரவுடிகளை தேடிச்சென்றுள்ளது.
ஏகாங்கிபுரம் ராஜீவ் காந்தி நகரில் ரவுடிகள் தங்கியிருப்பதை போலிசார் கண்டுபிடித்தனர். அதிரடியாக ரவுடிகள் இருக்கும் இடத்தை அடைந்த போலிசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.அப்போது ரவுடிகள் மாடி விட்டு மாடி தாவி தப்பி செல்ல முயன்றனர் கையில் உள்ள கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.அப்போது தப்பித்த சில ரவுடிகள் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி ஒன்றில் மறைந்து இருந்துள்ளனர். அடுக்கு மாடி காலணி வீடுகள் வரிசையாக இருப்பதால், போலிசார் ரவுடிகளை பிடிக்க முடியாமல் திணறினர்
அப்போது போலிசார் மறைந்திருந்த ரவுடிகள் சரணடையவில்லை எனில் என்கவுண்டர் செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். கையில் துப்பாக்கி
கூட இல்லாமல் சாமர்த்தியமாக என்கவுண்டர் செய்து விடுவதாக போலிசார் நாடகமாடியதில், பயந்து ரவுடிகள் சரணடைந்துள்ளனர்.
கத்திகளுடன் சரணடைந்த பிறகுதான் போலிசார் கையில் துப்பாக்கி இல்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பிடிபட்ட 5 ரவுடிகளை விசாரணை செய்ததில் ரவுடிகள் மணவாளன்,
கிருபாராஜ், ராஜ்குமார் கோபிநாத், உதயகுமார் என தெரிய வந்துள்ளது இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன பிடிபட்ட ரவுடிகளை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.