மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை | கணவர் போலீசில் சரண் |
கணவன் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்தை செலவு செய்ததால் நேர்ந்த விபரீதம்..
திருச்சி வடக்கு ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் /40 இவரது மனைவி மகாலட்சுமி /36 இரண்டு மகன்கள் இவருக்கு உள்ளனர்.
இவரது தொழில் சமோசா கடை சொந்தமாக நடத்தி வருகிறார் சில மாதங்களுக்கு முன்புதான் இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு திரும்பிய நிலையில் நேற்று இவருக்கும் இவரது மனைவி மகாலட்சுமிக்கும் சண்டை முற்றி இரவு மகாலட்சுமி தூங்கிக் கொண்டு இருக்கும் போது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
பிறகு மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் செய்த கொலையை ஒப்புகொண்டு தானே சரணடைந்தார்.
வாக்கு மூலத்தில் தான் வெளிநாட்டில் சம்பாதித்து மனைவிக்கு அனுப்பிய பணத்தை ஊருக்கு திரும்பிய பின் கேட்டபோது மகாலட்சுமி அந்த பணத்தை செலவு செய்ததாகவும் செலவு செய்ததற்கு முறையான கணக்கு கொடுக்காததால் இருவருக்கும் இது தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் நேற்று சண்டை முற்றிய நிலையில் கொலைக்கு துணிந்து இரவோடு இரவாய் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்…
நமது நிருபர்